ADDED : ஆக 16, 2025 11:42 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையொட்டி சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தி 108 சங்காபிஷேகம் நடந்தது.
மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.பூஜைகளை லோகு குருக்கள் செய்தார். இதேப் போன்று, நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவில், பூலோகநாதர்,வரசித்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
