சிறப்பு சுருக்கமுறை திருத்தம் விருத்தாசலத்தில் ஆலோசனை
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் விருத்தாசலத்தில் ஆலோசனை
UPDATED : நவ 27, 2026 08:40 PM
ADDED : நவ 27, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நேர்முக உதவியாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் சாருலதா, கணினி உதவியாளர்கள் சுரேஷ், அருள்குமார் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அதில், சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி படிவங்கள் 6, 7, 8 மூலம் பெயர் சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம், தொகுதிக்குள் மாறுதல், வெளி தொகுதியில் இருந்து மாறுதல், ஊனமுற்றோர் உள்ளிட்ட பதிவுகளை படிவம் 9, 10, 11 மற்றும் 11 ஏ, 11 பி படிவங்களில் பதிவாகி இருப்பதை சரிபார்த்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
