/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்... இயக்கம்; பக்தர்களுக்கு வசதியாக தென்னக ரயில்வே ஏற்பாடு

ADDED : ஆக 21, 2024 07:47 AM
விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில், கடந்த 2009ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில்பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டது.இதன் காரணமாக ஏராளமான விரைவு ரயில்கள் இந்த மார்க்கத்தில் வரும் என ரயில் பயணிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த 15ஆண்டுகளாகியும் பெரிய அளவிலான ரயில்கள் விடப்படவில்லை. மாறாக முன்பு ஓடிய ரயில்கள் நிறுத்தப்பட்டதாக ரயில் பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக கடலுார் வழியாகசிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அகமாதாபாத்-திருச்சி இடையே சிறப்ப ரயில், கடலுார் வழியாக விடப்பட்டுள்ளது. தற்போது மற்றுமொரு சிறப்பு ரயில், செகன்திராபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு விட தென்னக ரயில்வேஅறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், வரும் 27 ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
செகன்திராபாத்தில் இருந்து ரயில் எண் (07125), 27ம் தேதி காலை 8.25 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை வேலுார் 1:20 மணிக்கும்,திருவண்ணாமலை 2:20, விழுப்புரம் 3:50, கடலுார் முதுநகருக்கு காலை 4:30மணிக்கு வருகிறது.
சிதம்பரத்தில் 5:10க்கு கிளம்பி, மயிலாடுதுறை வழியாக திருவாரூர் காலை 7:00 மணிக்கும், நாகப்பட்டிணம் 8.10 மணி, 9:30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
அதேபோல், எதிர் திசையில் வேளாங்கண்ணியில் இருந்து ரயில் எண் (07126) 28 ம் தேதி இரவு 10:45மணிக்கு புறப்படுகிறது.
இந்த விரைவு ரயில் நாகப்பட்டிணத்திற்கு 11:00 மணிக்கும், திருவாரூர் 12:20, சிதம்பரம் 3:40; கடலுார் முதுநகர் 4:13, விழுப்புரம் 6:40 மணிக்கும், மறுநாள் அதிகாலை 3:00மணிக்கு செகன்திராபாத் சென்றடைகிறது.
பின்னர், 29ம் தேதி செகன்திராபாத்தில் இருந்தும் வேளாங்கண்ணிக்கும், 30 ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து செகன்திராபாத்திற்கும் ரயில் இயக்கப்படுகிறது.