/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் சிறப்பு முகாம்; கண்காணிப்பாளர் ஆய்வு
/
வாக்காளர் சிறப்பு முகாம்; கண்காணிப்பாளர் ஆய்வு
ADDED : நவ 24, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு சந்தைத்தோப்பு அரசு துவக்கப் பள்ளியில் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் சேத்தியாத்தோப்பில் 15 வார்டுகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர்களை சரிபார்த்தல் பணிகள் நடந்தது.
இப்பணிகளை தேர்தல் வாக்காளர் பட்டி யல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.
தாசில்தார்கள் தனபதி, தமிழ்செல்வன், துணை தாசில்தார் இளவரசி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன், கிராம உதவியாளர் அன்புதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.