/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூவராக சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
/
பூவராக சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : செப் 28, 2025 08:09 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர்.
நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையொட்டி மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. உற்சவர் யக்ஞவராகன், தேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
விருத்தாசலத்தில் இருந்து வைஷ்ணவ மகா சபை சார்பில் பக்தர்கள் பாதயாத்திரையாக தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.