ADDED : டிச 19, 2025 06:25 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அரு ள்பாலிக்கிறார்.
அனுமன் ஜெயந்தியை முன் னிட்டு அனுமன் விசேஷ அலங்காரத்தில் அருள்பாலிக் கிறார். காலை விஸ்வரூப தரிசனம், உற்சவர் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அரு ள்பாலிக்கிறார். பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட் சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.
