/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறையூர் பள்ளியில் விளையாட்டு போட்டி
/
இறையூர் பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : நவ 12, 2025 10:29 PM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விளையாட்டுப் போட்டி துவக்க விழா நடந்தது.
பள்ளி செயலர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். பள்ளி பொருளாளர் திருஞானசம்பந்தம், பள்ளிக்குழு தலைவர் ஞானகணேஷ், துணை தலைவர் சிவசங்கர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கோபி வரவேற்றார். பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
இதில், மாணவர்களுக்கு 100 மீ., 200 மீ., 400 மீ., 1,500 மீ., மற்றும் நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் அனிதா, திணேஷ், அருள்முருகன் நடத்தினர். உடற்கல்வி இயக்குனர் ராஜா நன்றி கூறினார்.

