/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா பள்ளியில் விளையாட்டு போட்டி
/
ஜெயப்பிரியா பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : பிப் 16, 2024 12:06 AM

மந்தாரக்குப்பம் : விருத்தாச்சலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்தது.
ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஸ்போட்டி பிட்ஸஜன் என்ற விளையாட்டு அமைப்பினர், கால்பந்து, கோ-கோ விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
ஜெயப்பரியா வித்யாலாயா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர் போட்டிகளை துவக்கி வைத்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்விக் குழுமங்களின் இயக்குநர் தினேஷ் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.
விளையாட்டு போட்டிக் கான ஏற்பாடுகளை ஸ்போட்டி பிட்ஸஜன் விளையாட்டு அமைப்பினர் செய்திருந்தனர்.
விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்