/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா பள்ளியில் விளையாட்டு போட்டி
/
ஜெயப்பிரியா பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : மார் 14, 2024 11:47 PM

மந்தாரக்குப்பம்: திருப்பயர் - ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லீக் விளையாட்டு போட்டி நடந்தது.
திருப்பயர் - ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்போட்டி பிட்ஸஜன் என்ற விளையாட்டு அமைப்பு, நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் இளம் வயதிலேயே, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், கால்பந்து மற்றும் கோ-கோ விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.
விளையாட்டு லீக் போட்டியை, ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் நிறுவனர் ஜெய்சங்கர் துவங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜெயப்பிரியா கல்வி குழும இயக்குனர் தினேஷ் பரிசு வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை ஸ்போட்டி பிட்ஸஜன் விளையாட்டு அமைப்பினர் செய்திருந்தனர்.

