/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மஞ்சக்கொல்லை பள்ளியில் விளையாட்டு போட்டி
/
மஞ்சக்கொல்லை பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : அக் 02, 2024 11:51 PM

புவனகிரி : புவனகிரி குறுவட்ட அளவிலான சைக்கிள் போட்டி மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது.
தலைமை ஆசிரியர் ரவி, போட்டியை துவக்கி வைத்தார். பி.முட்லுார் அரசு மாதிரி பள்ளி, பின்னலுார் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆயிபுரம் அரசு உயர் நிலை பள்ளி, புவனகிரி மங்களம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஈஷா மெட்ரிக்குலேஷன் பள்ளி, சேத்தியாத்தோப்பு சந்திரா மேல்நிலைப்பள்ளி, பரணி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை, ஆண்டார் முள்ளிப்பள்ளம் உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார் வழங்கினார்.
புவனகிரி வட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.