/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரைம் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு போட்டி
/
பிரைம் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : ஜன 16, 2025 04:18 AM
-வேப்பூர் :   வேப்பூர் பிரைம் இன்டர்நேஷ்னல் பள்ளியில் 10ம் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் உளுந்தூர்பேட்டை ஆனந்த கிருஷ்ணன், கள்ளக்குறிச்சி குமரன், சங்கராபுரம் சர்வேயர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வேப்பூர் இன்ஸ்பெக்டர் சசிகலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பள்ளி தலைவர் பெருமாள், பொருளாளர் திருவாசகமணி, நிர்வாகிகள் மணி, தீபன், கனிமொழி சரவணன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

