/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
/
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
ADDED : பிப் 15, 2024 06:33 AM

கடலுார், : கடலுார் மாவட்ட தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கடலுார் மகாலட்சுமி கல்வி குழுமம் தலைவர் ரவி வரவேற்றார். இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் ஜான் போஸ்கோ பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். ஐ.டி.ஐ., தாளாளர்கள் முகுந்தன், சிவராமன், சரவணன், சிலம்புசெல்வன் வாழ்த்துரை வழங்கினர். மகாலட்சுமி ஐ.டி.ஐ., முதல்வர் பாபு நன்றி கூறினார்.

