/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரியப்பட்டு கிராமத்தில் விளையாட்டு போட்டி
/
பெரியப்பட்டு கிராமத்தில் விளையாட்டு போட்டி
ADDED : ஜன 16, 2025 05:31 AM

புதுச்சத்திரம் : நேரு யுவகேந்திரா மற்றும் பெரியப்பட்டு ஜெய்பீம் இளையோர் நற்பணி மன்றம் சார்பில், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி பெரியப்பட்டு கிராமத்தில் நடந்தது.
மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். ஜெய்பீம் இளையோர் நற்பணி மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
போட்டியை புவனகிரி துணை தாசில்தார் அம்பேத்கர் ராஜ் துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா, கோதண்டபாணி அறக்கட்டளை தலைவர் துரைராமலிங்கம், ஆதிக்குடிகள் ஐக்கிய பேரவை தலைவர் ரகுவசந்தன், இணைசெயலாளர் நிர்மல்குமார், சமூக ஆர்வலர் கார்த்திக் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
பரங்கிப்பேட்டை ஒன்றிய, தேசிய இளையோர் தொண்டர்கள் சாந்தப்பிரியா, மேனகா ஏற்பாடுகளை செய்திருந்தனர். நற்பணி மன்ற துணை செயலாளர் ஆரோக்கிய லியா நன்றி கூறினார்.