/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு போட்டி: மகாலட்சுமி ஐ.டி.ஐ., முதலிடம்
/
விளையாட்டு போட்டி: மகாலட்சுமி ஐ.டி.ஐ., முதலிடம்
ADDED : பிப் 17, 2024 11:51 PM

கடலுார்: கடலுாரில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் மகாலட்சுமி ஐ.டி.ஐ., முதலிடம் பிடித்தது.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் ஐ.டி.ஐ., களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நடந்தது. இதில், கடலுார் மகாலட்சுமி ஐ.டி.ஐ., மாணவர்கள் கால்பந்து மற்றும் பூப்பந்தாட்ட போட்டியில் பரிசு கோப்பை வென்றனர்.
நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியில் முதலிடம், தொடர் ஓட்டம், ஈட்டி எறிதலில் இரண்டாமிடம் பிடித்தனர். இதன் மூலமாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து, மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
பரிசளிப்பு விழாவில், விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் ஜான் போஸ்கோ பரிசு வழங்கினார். விழாவில், மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார், மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி, துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ், அரசு ஐ.டி.ஐ., முதல்வர் செங்குட்டுவன், உதவி இயக்குனர் பரமசிவம், ஆர்.கே., ஐ.டி.ஐ., தாளாளர் முகுந்தன், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., தாளாளர் சுந்தரவடிவேல், எம்.கே.ராமன் ஐ.டி.ஐ., தாளாளர் சரவணன், கெங்குசாமி நாயுடு ஐ.டி.ஐ., முருகவேல், செயின்ட் ஜோசப் ஐ.டி.ஐ., முதல்வர் எட்வர்ட் ஜெயக்குமார் பங்கேற்றனர்.