/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
/
புவனகிரியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : ஜன 16, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : நேரு யுவகேந்திரா, கடலூர் மாவட்ட அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து, ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர்.
புவனகிரி ஆதிவராகநல்லூர் அம்பேத்கர் திடலில் நடந்த நிகழ்ச்சியில், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். ரகுவசந்தன் வரவேற்றார். புவனகிரி குடிமை பொருள் துணை தாசில்தார் அம்பேத்கர் ராஜ் முன்னிலை வகித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் துரைமணிராஜன் பரிசு வழங்கினார்.
ஏற்பாடுகளை தேசிய இளைஞர் தொண்டர்கள், நேரு யுகேந்திரா வசந்தராஜா, விஷால், சுகன்யா செய்தனர்.
பொருளாளர் சூர்யா நன்றி கூறினார்.

