ADDED : பிப் 05, 2024 04:15 AM
அ நிறம் | அளவு
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகள் நடந்தது.
பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி செயலர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். பள்ளிக்குழு துணை தலைவர் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் கோபி வரவேற்றார்.
இதில், உடற்கல்வி இயக்குனர் ராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் அனிதா, திணேஷ், அருள்முருகன், ஆசிரியர்கள், மாணவர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்
இதில், கபடி, வாலிபால் உட்பட பல்ேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
