ADDED : மார் 01, 2024 10:45 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி ராமதாஸ் கல்லுாரியில், மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், விளையாட்டுப் போட்டி, வாக்காளர் விழிப்புணர்வு முகாம், ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவசங்கரன், துணை முதல்வர் சிவஞானம் முன்னிலை வகித்தனர். எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் கதிரவன், உடற்கல்வி இயக்குனர் கிருஷ்ணலீலா உட்பட பலர் பங்கேற்றனர்.
விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
