/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆனந்தன் பள்ளியில் விளையாட்டு விழா
/
ஆனந்தன் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : மார் 30, 2025 04:39 AM

கடலுார் : குள்ளஞ்சாவடி அடுத்த வன்னியர்பாளையம் ஆனந்தன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.
ஆனந்தன் கல்விக்குழுமங்களின் தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குனர் ஞானசுந்தரி, பள்ளி செயலாளர் நிஷாந்தினி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் எஸ்.பி.,ஜெயக்குமார் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். தேசியக்கொடியை எஸ்.பி.,ஜெயக்குமார், ஒலிம்பிக் கொடியை டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன், பள்ளிக்கொடியை இன்ஸ்பெக்டர் பிருந்தா ஏற்றி வைத்தனர். விழாவில், சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
போதைப்பொருள் ஒழித்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.