/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜவஹர் கல்லுாரியில் விளையாட்டு விழா
/
ஜவஹர் கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : ஏப் 02, 2025 10:39 PM

மந்தாரக்குப்பம்; நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு என்.எல்.சி., முதன்மை பொதுமேலாளர் மற்றும் கல்லுாரி செயலாளர் பங்கஜ் குமார் தலைமை தாங்கினார்.
கல்லுாரி முதல்வர் கிப்ட் கிரிஸ்டோபர் தன்ராஜ் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் பிரபு ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி மாணவர்களுக்கு கபடி, கால்பந்து, கைப்பந்து, மட்டை பந்து, மாணவிகளுக்கு கபடி, கோ-கோ, தடகளப் போட்டிகள் நடைபெற்றது. 728 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று 280 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் பரிசு வழங்கினார்.
என்.எல்.சி., பள்ளிகள் செயலாளர் பிரபாகரன், ஜவஹர் பள்ளிகள் செயலாளர் கல்பனாதேவி, ஜவஹர் அறிவியல் கல்லுாரி துணை செயலாளர் அறிவு, ஜவஹர் பள்ளி துணை செயலாளர் அருளழகன், சிற்றக்கலா, டாக்டர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடற்கல்வி பயிற்றுநர் சாந்தகுமாரி நன்றி கூறினார்.

