/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மு.பரூர் அரசு பள்ளியில் விளையாட்டு விழா
/
மு.பரூர் அரசு பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஏப் 02, 2025 10:32 PM

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த மு.பரூர் அரசு துவக்க பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை தாங்கி, பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில்குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் பிரபு, சுரேஷ், கணேஷ், ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி மோகன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஷேக் உசேன் வரவேற்றார்.
தொடக்கக் கல்வி டி.இ.ஓ., பரமசிவம், பி.இ.ஓ., ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
மேலும், முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், தண்டபாணி, கலைச்செல்வன், அழகிரி உள்ளிட்டோர் பள்ளிக்கு தேவையான கல்வி சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர்.
ஆசிரியர் திவ்யா நன்றி கூறினார்.

