ADDED : ஏப் 07, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரியை இலங்கை நடனக்குழுவினர் பார்வையிட்டனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்து மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க வீராணம் ஏரி உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் ஏரியில் தண்ணீர் 44.5 அடி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.இதனை பல்வேறு வெளிநாட்டினர், உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து வந்திருந்த பரதநாட்டிய நடன குழுவினர் 70 க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் வந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். இதேப் போன்று, நேற்று வீராணம் ஏரியை பார்வையிட்டு மகிழ்ந்து, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.