/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி புவனகிரியில் அருள்பாலிப்பு
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி புவனகிரியில் அருள்பாலிப்பு
ADDED : மார் 02, 2024 06:05 AM

புவனகிரி : புவனகிரியில் நான்காம் நாள் மாசி மக உற்சவத்தில் பூவராகசாமியை பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவில் உற்சவரான உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் எழுந்தருளச் செய்து, கடந்த 24ம் தேதி கிள்ளையில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. பின், புன்செய்மகத்து வாழ்க்கை, மேலமூங்கிலடியில் அருள்பாலித்தார்.
கடந்த 27ம் தேதி புவனகிரிக்கு எழுந்தருளினார். பாலக்கரையில் பக்தர்கள் வரவேற்பளித்து சவுரஷ்டிரா வீதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள கண்ணன் மடத்தில் சிறப்பு திருமஞ்சனம், அர்ச்சனை நடந்தது.
தொடர்ந்து, பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. நான்காம் நாளான நேற்று புவனகிரியில் பூவராகசாமி எழுந்தருளச் செய்து காலை முதல், இரவு வரை வர்த்தக சங்க உபயம் நடந்தது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வர்த்தக சங்க கவுரவ தலைவர் கலியபெருமாள், தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் ரத்தின சுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் செய்திருந்தனர். சிதம்பரம் விஜய் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் விஜய் பிரபு, சிதம்பரம் ஜி லேண்ட்ன் பிராப்பர்ட்டி டெவலப்மென்ட் உரிமையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கினர்.

