/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி., இன பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
/
எஸ்.டி., இன பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
எஸ்.டி., இன பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
எஸ்.டி., இன பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
ADDED : ஜன 09, 2024 06:57 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், பழங்குடி இன பெண்களுக்கான மூன்று மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்க விழா நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கம்யூட்டர் மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் சார்பில் இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் பழங்குடி இன பெண்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி நடந்து வருகிறது.
இதற்கான 3 மாத பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நடந்த விழாவிற்கு கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் புவியரசன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பாலமுருகன் வரவேற்றார்.
அரசு தொழில் பயிற்சி நிறுவனம் முதல்வர் பாலமுரளிதர், பழங்குடி இன கொல்லிமலை திட்ட அலுவலர், பீட்டர் ஞானராஜ், முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
அமைப்பு செயலாளர்கள் பிரவீனா, சாய்லீலா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். பழங்குடியினர் நலத்துறை குழு உறுப்பினர் காளியப்பன் நன்றி கூறினார்.