/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி. ஈடன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
எஸ்.டி. ஈடன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 24, 2024 06:56 AM

சேத்தியாத்தோப்பு: சங்கராபுரத்தில் நடந்த ஆஸ்கர் உலக சாதனைக்கான போட்டிகளில் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்தவர்களை பாராட்டி சான்று வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஆஸ்கர் உலக சாதனைக்கான போட்டி நடந்தது.
இதில், வடலுார் எஸ்.டி.ஈடன் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர் குருசரண், ஆறாம் வகுப்பு மாணவர்கள் சாய்சூர்யா, சர்மா ஆகியோர் சிலம்ப போட்டிகளில் உலக சாதனை படைத்தனர்.
மூன்றாம் வகுப்பு மாணவிகள் லக்ஷிதா, கவினா, பிரித்திகா, ஐந்தாம் வகுப்பு மாணவி ஜாஸ்மின், ஏழாம் வகுப்பு மாணவி சுமித்ரா, எட்டாம் வகுப்பு மாணவி கீர்த்தனா ஆகியோர் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்.
சாதனை மாணவர்களை பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் பாராட்டி சான்று வழங்கினர்.