/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்
/
கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்
ADDED : அக் 10, 2025 03:41 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அண்ணாமலை தெருவில் கழிவுநீர் செல்லாததால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி 9வது வார்டு அண்ணாமலை தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வாய்க்கால் உள்ளது. இந்த கழிவுநீர் முழுவதும் அருகில் உள்ள ராமு தெருவில் செல்லும் கால்வாயில் இணைத்துள்ளனர். ராமு தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்தது. அப்போது அண்ணாமலை தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் செல்லும் வழி ஏற்படுத்தவில்லை. இதை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் அண்ணாமலை தெரு வீடுகளின் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் பல நாட்களாக கழிவுநீர் தேங்கியிருப்பதால் கொசு தொல்லை அதிகமாகி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
கழிவுநீர் தேங்கி நிற்பது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பருவமழை துவங்குவதற்குள் கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.