/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ADDED : டிச 30, 2025 05:15 AM

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் வரவேற்றார். பி.டி.ஓ., சரவணன் முன்னிலை வகித்தார். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மனோகர், முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம், இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கினார். கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் பங்கேற்று, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதையும், சிறப்பு பரிசோதனை செய்யும் இடங்களை பார்வையிட்டு, சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் சேர்மன்கள் மதியழகன், கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், அமைப்பு சாரா இணை செ யலாளர் சுப்பு வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் இளவரசு, செல்வகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

