/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 20, 2025 07:12 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சுதா சம்பத், ஒன்றிய அவைத் தலைவர் பாலு, தொண்டரணி அமைப்பாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி செல்வராசு, தமிழ்செல்வன், கிளை செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தனர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுஜாதா, ஒரத்துார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, தி.மு.க., நிர்வாகிகள் பாலகுரு, பாஸ்கர், சுப்ரமணியன், செழியன், சரவணக்குமார், அஞ்சம்மாள், ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.