/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 25, 2025 11:40 PM

கிள்ளை: கிள்ளை அடுத்த பின்னத்துார் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
பி.டி.ஓ., சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., அமுதா முன்னிலை வகித்தார்.
பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் கலையரசன், டாக்டர் மனோகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமில், 16 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் மனுக்களைபெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், துணை பி.டி.ஓ., சுப்புலட்சுமி, ஒன்றிய அவை தலைவர் நல்லதம்பி, ஒன்றிய துணை செயலாளர்கள் சதா இளவரசு, செல்வகுமாரி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், அமைப்ப சாரா ஓட்டுனர் அணி சுப்பு வெங்கடேசன், முன்னாள் சேர்மன் கருணாநிதி, இளைஞரணி துணை அமைப்பாளர் சேரமன்னன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் காதர்மஸ்தான், சுபாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.