ADDED : செப் 28, 2025 11:15 PM

அ நிறம் | அளவு
கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
தாசில்தார் அன்பழகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சரவணன், பாலாமணி முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர், முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் சுப்பு வெங்கடேசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சதா இளவரசு, செல்வகுமாரி, நிர்வாகிகள் செந்தில்ராஜா, அரவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
