ADDED : ஜூலை 24, 2025 10:30 PM

அ நிறம் | அளவு
புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றியம், கண்ணங்குடியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரசுப்ரமணியன் வரவேற்றார். கீரப்பாளையம் மத்திய தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலு முகாமை துவக்கி வைத்து, மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார்.
முகாமில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் அன்புச்செல்வி, ரமேஷ்குமார் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர். ஊராட்சி செயலர் உத்திராபதி நன்றி கூறினார்.
