/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில வில்வித்தை போட்டி; கடலுார் மாணவர்கள் சாதனை
/
மாநில வில்வித்தை போட்டி; கடலுார் மாணவர்கள் சாதனை
ADDED : செப் 18, 2024 09:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், கடலுார் மாணவர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
மதுரையில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இதில், கடலுார் மாவட்டம் சார்பில் கடலுார் டைகர் இன்டர்நேஷனல் வில்வித்தை அகாடமி பயிற்சியாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் தரணீஸ்வரன், ஷான், சயிரன், திவாகர், நவதீப், மதன்மோகன், மாணவியர் லக்ஷயா, ஓவியா, பதவாரணி ஆகியோர் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர். மேலும், 5 பேர் வெள்ளியும், 4 பேர் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.