ADDED : ஜன 07, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் அருகே குமராட்சியில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் இளவரசி, 30; இவர், நேற்று முன்தினம், சிதம்பரம் அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது பஸ் மோதி இருவரும் இறந்தனர்.
இருவரின் உடலும், அக்கறை ஜெயங்கொண்டபட்டினத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி.,க்கள் லாமேக், விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை 11.30 மணியளவில் பெண் சப் இன்ஸ்பெக்டர் உடலுக்கு, காவல் துறை சார்பில், 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து, உடல் தகனம் செய்யப்பட்டது.

