/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில ஜூடோ போட்டி அரசு பள்ளி மாணவி சாதனை
/
மாநில ஜூடோ போட்டி அரசு பள்ளி மாணவி சாதனை
ADDED : பிப் 01, 2024 05:59 AM

கடலுார்: மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கடலுார் அரசு பள்ளி மாணவி மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
பெரம்பலுார் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. இதில், 48 கிலோ எடை குறைவு பெண்கள் பிரிவில் கடலுார் வரதம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி அர்ச்சனா மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து, பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், மாணவி அர்ச்சனாவிற்கு, தலைமை ஆசிரியை தனலட்சுமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, உதவி தலைமை ஆசிரியை விஜயப்பிரியா, உடற்கல்வி ஆசிரியர்கள் இளவரசி, ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.