ADDED : மே 21, 2025 03:04 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் விருதை வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளியில், மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.
மாற்றுத் திறனாளிகள் சதுரங்க சங்கம், தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம், மாவட்ட சதுரங்க சங்கம், லெசுநாதன் சதுரங்க அகாடமி மற்றும் விருதை வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி ஆகியவை இணைந்து நடத்தியது.
போட்டியை, பள்ளி தலைவர் செந்தில்குமார், செயலாளர் மதியழகன், பொருளாளர் அருள்குமார், ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டியின் தலைமை நடுவராக பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு நடுவர் தமிழரசன் செயல்பட்டார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர் சர்வதேச நடுவர் ஆனந்த் பாபு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.