ADDED : மார் 28, 2026 06:43 AM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: மார்ச் 28-: தமிழகத்தில், வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் 100 சதவித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கோலம் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு, கோலம் வரையப்பட்டது.
நிகழ்ச்சியில், செயல் அலுவலர் மயில்வாகனன், தலைமை எழுத்தர் செல்வராஜ்,துப்புரவு ஆய்வாளர் பிரித்தி மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
