/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாருதி கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனையில் அதிநவீன லேசர் சிகிச்சை மையம் திறப்பு

ADDED : டிச 23, 2024 04:28 AM

கடலுார் : கடலுார் மாருதி கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனையில் அதிநவீன லேசர் சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது.
பைல்ஸ், பெளத்திரம், சிறுநீரக கல் மற்றும் வெரிகோஸ் வெய்ன் போன்ற நோய்களுக்கு கடலுாரில் முதல் முறையாக கடலுார் மாருதி கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனையில் அதிநவீன லேசர் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. விழாவில், மாருதி கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெயசித்ரா சந்திரலாதன், அறுவை சிகிச்சை டாக்டர்கள் சந்திரலாதன், சசிதர், ராஜ்மோகன், சீனுவாசன், கவுதமன் மற்றும் மருத்துவமனை பொது மருத்துவர்கள், உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுார் மற்றும் சுற்று வட்டார மாவட்ட மக்களுக்காக குறைந்த விலையில் உயர்ந்த தொழில்நுட்பத்தில் சிகிச்சையளிப்பதே நோக்கம் எனவும், இம்மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி, குடல் இறக்கம் அறுவை சிகிச்சை, புற்றுநோயியல் துறையும், அனைத்து வகையான புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை துறையும் இயங்குகிறது என, மாருதி கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனை சிறப்பு அறுவை சிகிச்சை டாக்டர் சந்திரலாதன் கூறினார்.