ADDED : ஆக 26, 2026 04:02 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றனர்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குறுவட்ட அளவிலான எறிபந்து இறுதிப் போட்டியில், விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில், முதலிடம் பிடித்தனர்.
அதுபோல், வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த குறுவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியிலும், பண்ருட்டி அடுத்த மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான போட்டியிலும் இப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர் மனோஜ், பிளஸ் 1 மாணவர் ஹரிஹரன் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் 14, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான டேக்வாண்டோ போட்டியில், மாநில அளவில் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் சுரேஷ், முதல்வர் சக்திவேல் உட்பட ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இம்மாணவர்கள் இருவரும், ராஜபாளையம் மாவட்டத்தில் நேற்று முதல், மூன்று நாட்கள் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
