ADDED : மார் 28, 2026 06:47 AM

கடலுார்: கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை நிறுவனர் சிலை திறக்கப்பட்டது.
கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை நிறுவனர் கிருஷ்ணமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை நடந்தது. ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டாக்டர் ரம்யா, மருத்துவமனை ஊழியர்களின் சேவையை பாராட்டி கேடயம் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மூத்த மருத்துவர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கிருஷ்ணா கேன்சர் இன்ஸ்டிடியூட் சேர்மன் ஸ்ரீகிருஷ்ணா நிறுவனரைப்பற்றி பேசினார்.
லட்சுமி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிறுவனரின் சிலையை திறந்து வைத்தனர்.
நினைவுநாளையொட்டி நடந்த ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்தம் தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
