/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை
ADDED : செப் 27, 2024 05:28 AM
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு வடக்கு வெள்ளுர். கீழ்பாதி, மேல்பாதி, பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தினசரி 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இப்பகுதியில் இரவு நேரத்தில் குழந்தைகள் உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ, விபத்துகள் நேர்ந்தாலோ சிகிச்சைக்கு விருத்தாசலம், கடலுார் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் கால விரயம் ஏற்படுவதுடன் உயிரிழப்பும் நிகழ்கிறது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்கும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்