/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்
/
என்.எல்.சி.,யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்
என்.எல்.சி.,யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்
என்.எல்.சி.,யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்
ADDED : டிச 02, 2024 06:58 AM
நெய்வேலி : என்.எல்.சி.,யின் மூன்று நிலக்கரி சுரங்கங்களிலும் பழுப்பு நிலக்கரி மற்றும் மேல்மண் வெட்டி எடுக்கும் பணி, தொடர் கனமழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள கிாரமங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களுக்குள் பாதிப்பு ஏற்படாத வகையில் மழை நீர், ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக நிலக்கரி சுரங்கங்களுக்குள் பழுப்பு நிலக்கரி மற்றும் மேல் மண் வெட்டி எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி வெட்டும் இயந்திரங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
கன்வயர் பெல்டுகள் இயங்கவில்லை. இருப்பினும் என்.எல்.சி.,யின் அனல்மின் நிலையங்களில் உள்ள பங்கர்களில் ( நிலக்கரி சேமித்து வைக்கப்படும் பகுதி) போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இருப்பதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவில்லை. என்.எல்.சி., அனல்மின் நிலையங்களில் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளை பொறுத்தவரை தொடர் மழை காரணமாக, சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. அந்த பகுதிகளில் மட்டும் மின் சப்ளை நிறுத்தப்பட்டு என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் சார்பில் கீழே விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.