/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது
/
ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது
ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது
ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது
ADDED : மார் 18, 2025 05:38 AM
பண்ருட்டி : சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த பண்ட்ரக்கோட்டையை சேர்ந்தவர் சீனு மகன் செல்வகுமார்,45; இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ௨ மகன்கள் உள்ளனர். செல்வக்குமார் தனியார் மோட்டார் பம்ப் செட் விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியை மிரட்டி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி வந்தார்.
புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வகுமாரை நேற்று கைது செய்தனர்.