/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
/
கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
ADDED : டிச 23, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயுல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இது, மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று காலை கடலுார் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.