/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயல் சின்னம் எதிரொலி கடலுாரில் கடல் சீற்றம்
/
புயல் சின்னம் எதிரொலி கடலுாரில் கடல் சீற்றம்
ADDED : நவ 30, 2024 05:11 AM

கடலுார்,: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் புயல் சின்னம் காரணமாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளன.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலுார் மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டன.
ஆனால், நேற்று காலை முதல் அலையின் சீற்றம் குறைவாகவே காணப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை புயலாக வலுப் பெற்றது.
இதன் காரணமாக மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் கடல் அலையின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டன. அலைகள் பல அடி துாரத்திற்கு எழும்புகிறது. குறிப்பாக, தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் நீர் கரையை தாண்டி வெளியேறியது. கடல் நீர் முகத்துவாரம் வழியாக வெளியேறி உப்பனாற்றில் கலக்கிறது.
மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக கரையோரம் வைத்துள்ளனர்.