/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
/
தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
ADDED : ஜூலை 07, 2025 01:59 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில், தி.மு.க., பேரூராட்சி இளைஞரணி சார்பில், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
பேரூராட்சி செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர் தங்க நாராயணசாமி, பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், அவை தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட பிரதிநிதிகள் சேகர், குழந்தை சுதந்திரன் முன்னிலை வகித்தனர்.
இளைஞரணி அமைப்பாளர் அப்துல் அஜித் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் மலர்மன்னன், செல்வமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு, தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.
இளைஞரணி துணை அமைப்பாளர் விக்ரம் நன்றி கூறினார்.