/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர்' நடத்திய மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு 4 மாவட்ட ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
/
'தினமலர்' நடத்திய மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு 4 மாவட்ட ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர்' நடத்திய மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு 4 மாவட்ட ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர்' நடத்திய மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு 4 மாவட்ட ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : பிப் 04, 2024 04:44 AM

கடலுார் : 'தினமலர்' நாளிதழ் சார்பில் கடலுாரில் நேற்று நடந்த, பள்ளி ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கும் விழாவில், புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
'தினமலர்' நாளிதழ், ராஜ் விஜய் டி.வி.எஸ்., நிறுவனத்தின் புதுச்சேரி மற்றும் கடலுார் கிளைகள், கடலுார் சுமங்கலி சில்க்ஸ் இணைந்து நடத்திய, 'பள்ளி ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை' கருத்தரங்கு, கடலுார் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவில், புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுார கல்வி இயக்கக இயக்குனர் சீனிவாசன், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுச்சேரி மண்டல விற்பனை மேலாளர் அரவிந்த், புதுச்சேரி - கடலுார் ராஜ் விஜய் டி.வி.எஸ்., நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சீனிவாசமூர்த்தி, கடலுார் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஸ்தர் அலி, கல்வியாளர் புகழேந்தி, சென்னை அவசெண்ட் சொல்யூஷன் நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி மதுமிதா கோமதிநாயகம் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
விழாவில், பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 15 பேருக்கு 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருதை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைத்துாரக் கல்வி இயக்கக இயக்குனர் சீனிவாசன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
கல்வியாளர் புகழேந்தி, மதுமிதா கோமதிநாயகம் ஆகியோர், ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் மேலாண்மை குறித்து, ஆலோசனை வழங்கினர்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில், மன அழுத்த பிரச்னைகளை அணுகும் முறை குறித்து, ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பதில் அளித்தனர்.
விழாவில், புதுச்சேரி மற்றும் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி எம்.எல்.ஏ., ஜான்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.