ADDED : ஜன 03, 2026 04:49 AM

அ நிறம் | அளவு
திட்டக்குடி: திருச்சி பாரதிதாசன் பல்கலை., திட்டக்குடி தொலைதுாரக்கல்வி மையத்தில் 2026ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.
மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கி னார். பேராசிரியர் சண்முகம் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., பார்த்திபன் பங்கேற்று மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கி, துவக்கி வைத்தார்.
தொ டர்ந்து, இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., மாணவர்களுக்கு விண்ணப்பம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மைய பணியாளர்கள் லட்சுமி, பரமேஸ்வரி, சுகுணா, சிவசங்கரி, ஹரிப்பிரியா, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
