ADDED : ஏப் 27, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில், வேளாண் இறுதியாண்டு மாணவர்கள் சார்பில் வேளாண் கண்காட்சி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவர்கள் காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி கிராமத்தில், தங்கி வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காட்டுமன்னார்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மற்றும் விவசாயிகள் பயிற்சி மையத்தில் வேளாண் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
வேளாண்மை உதவி இயக்குனர் உமாதேவி  தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில் விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை, ட்ரோன் தொழில் நுட்பங்கள், நோய் மேலாண்மை, மாடித்தோட்டம், விதைநேர்த்தி, பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

