/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாடியில் இருந்து குறித்து மாணவி தற்கொலை முயற்சி
/
பள்ளி மாடியில் இருந்து குறித்து மாணவி தற்கொலை முயற்சி
பள்ளி மாடியில் இருந்து குறித்து மாணவி தற்கொலை முயற்சி
பள்ளி மாடியில் இருந்து குறித்து மாணவி தற்கொலை முயற்சி
ADDED : அக் 16, 2025 02:33 AM
நெல்லிக்குப்பம்: பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, காயத்துடன் தப்பினார்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் பள்ளி இடைவேளை நேரத்தில் மொபைல்போனில் பேசியுள்ளார். இதையறிந்த பள்ளி நிர்வாகம், மாணவியின் பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளது. நேற்று மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். இதை பார்த்த அந்த மாணவி, பயந்து கொண்டு பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் மாணவியின் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.