ADDED : ஆக 29, 2026 10:41 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், பள்ளி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலையைச் சேர்ந்தவர் விஜயபாலன். இவரது, மகன் விஷ்வா, 15; சிதம்பரம் நந்தனார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். விஜயபாலன், அவரது மனைவி வள்ளி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். விஷ்வா, தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு டச் செல்போன் வாங்கி தருமாறு, விஷ்வா தந்தையிடம் கேட்டுள்ளார். அவர் வாங்கி தராததால், மனமுடைந்த விஷ்வா நேற்று முன்தினம் இரவு துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுகுறித்து, விஜயபாலன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
