தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயிலில் பாய்ந்து மாணவர் தற்கொலை

ரயிலில் பாய்ந்து மாணவர் தற்கொலை

ரயிலில் பாய்ந்து மாணவர் தற்கொலை


ADDED : ஜூன் 11, 2025 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 07:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே வயிற்று வலியால் அவதியடைந்த மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை கொண்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன் மகன் மாதேஷ்,18; இவர் நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், காலை 10:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகில் சென்றார். பின், திண்டுக்கல்-விழுப்புரம் செல்லும் இன்டர்சிட்டி பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சென்ற விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார், மாதேஷின் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us